சீரமைக்காத ரோடு: வெற்றி நகர் சாலையில் நாற்று நடும் போராட்டம்
தாராபுரம், வெற்றிநகர் பகுதியில் சாலையை சீரமைத்து தரக்கோரி, பொதுமக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில், மழைநீர் புகுந்தால், மக்கள் அவதியுற்றனர்.
வெற்றி நகர் பகுதியில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அருகே அரசு குடியிருப்பு காலனி, மஸ்தார் நகர் உள்ளிட்ட இடங்கள், இப்பகுதியை சார்ந்துள்ளன. இப்பகுதியில் மழைநீர் கால்வாயுடன் கூடிய சாலையை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என, வலியுறுத்தி வெற்றிநகர் பகுதியில் உள்ள சாலையில், நாற்று நடும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
தீர்வு காணப்படாத நிலையில் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து, வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.