தாராபுரம்: சட்ட விரோத 'பார்'களுக்கு 'சீல்'
அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மார்க் பார்கள் சீல் வைக்கப்பட்டன;
அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மார் பார்கள் சீல் வைக்கப்பட்டன. தாராபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், 16 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. கொரோனா தொற்றால் கடந்த ஆறு மாதமாக பார்கள் மூடப்பட்டிருந்தன. சமீபத்தில், தொற்று விதிமுறைக்கு உட்பட்டு பார்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. சிலர் ஏல தொகை செலுத்தாமல், 'பார்' நடத்தி வந்தனர்.
புகாரின் அடிப்படையில், டாஸ்மாக் மேலாளர் உத்தரவில், தாராபுரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வந்த, 14 டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்கள், அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டன.