விநாயகர் சதுர்த்தி: வாடிக்கையாளர்களுக்கு விதை விநாயகர் சிலை வழங்கல்

தாராபுரம் ஸ்வீட்ஸ் கடை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாடிக்கையாளா்களுக்கு இலவசமாக விதை விநாயகர் சிலை வழங்கப்பட்டது;

Update: 2021-09-10 12:14 GMT

திருப்பூர் மாவட்டம் , தாராபுரத்திலுள்ள ஸ்வீட் கடை.யில் வாடிக்கையாளர்களுக்கு விதை விநாயகர் சிலை வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்திலுள்ள  வீட்ஸ் கடை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடைக்கு வந்த வாடிக்கையாளா்களுக்கு இலவசமாக விதை விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தாராபுரம், நெல்லை லாலா சுவீட்ஸ் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவச விதை விநாயகர் சிலைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று நடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு உரிமையாளர்கள் சங்கர் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் வழங்கினர். வாடிக்கையாளர்கள் 600  பேருக்கு விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டது.




Tags:    

Similar News