சிறுமியுடன் ரகசிய திருமணம்: பஸ் கண்டக்டர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை ரகசிய திருமணம் செய்த கண்டக்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-10 12:46 GMT

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த காங்கயம் சிவகிரியை சேர்ந்தவர் சண்முகம் (39). இவர் ஈரோடு பள்ளப்பட்டி சென்று வரும் தனியார் பஸ்சில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கரூர் பள்ளபட்டி பகுதியை சேர்ந்த 7 ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி காங்கயத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை தனியார் பஸில் வந்துள்ளார். அப்போது சண்முகத்துக்கும், சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

சண்முகம், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ரகசிய திருமணம் செய்துள்ளார். சிறுமியில் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர், எஸ்பி., ஷசாந்த் சாயிடம் புகார் அளித்தனர். எஸ்பி., உத்தரவின் பேரில், தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸார், சண்முகத்தை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் சண்முகத்திற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதும், காங்கேயம் பகுதியில் வீடு எடுத்து கடந்த 6 மாதமாக சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. சிறுமியுடன் ரகசியமாக குடும்பம் நடத்திய நடத்துனர் சண்முகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News