ஆயுதபூஜை முன்னிட்டு பூஜைப்பொருட்கள் விற்பனை ஜோர்
தாராபுரத்தில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூஜைப்பொருட்கள் பழம், பொரி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது;
தமிழகம் முழுவதும் ஆயுதப்பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஆயுதப்பூஜையின் போது தாங்கள் பயன்படுத்தும் ஆயுதங்களை சுத்தம் செய்து, பழங்கள், பொரி, அவல், வாழைப்பழம், சுண்டல், பொங்கல் போன்றவை வைத்து வழிபாடு நடத்துவர். தாராபுரம் அண்ணா சிலை கடைவீதி, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட பகுதி மற்றும் பிளாட்பாரங்களில் பூஜைப்பொருட்கள் விற்பனை சூடுபிடித்து காணப்பட்டது.
பூவம் பழம் ஒன்று 4 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பூவன் வாழைத்தார் 650 முதல் 750 ரூபாய், கதளி ஒரு தார் 650 முதல் 700 ரூபாய், ஆப்பிள் 80 ரூபாய், சாத்துக்குடி 100 ரூபாய், திராட்சை 50 ரூபாய் முதல் 90 ரூபாய், மாதுளை 150 ரூபாய், பொரி ஒரு படி 20 ரூபாய், அவல் 100 கிராம் 15 ரூபாய், நிலக்கடலை 100 கிராம் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வாழைக்கன்று சிறியவை 50 ரூபாய், பெரியது 80 ரூபாய் வரை, மாவிலை கட்டு 10 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.