தாராபுரத்தில் சுமைத்தூக்கும் தொழிலாளி கொலை: உறவினர்கள் சாலை மறியல்

தாராபுரத்தில் சுமைத்தூக்கும் தொழிலாளியை கொலை செய்தவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்;

Update: 2021-07-18 11:20 GMT

தாராபுரத்தில் கொலை செய்தவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் கரூர் ரோட்டில்  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த விராச்சிமங்கலத்தை சேர்ந்த நாகராஜ் மகன் கோபிநாத்,21, சுமைத்தூக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கோபிநாத், டூ வீலரில் உப்பாறு அணையை அடுத்த மடத்துப்பாளை அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் கோபிநாத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இது தகவல் அறிந்த தாராபுரம் போலீசார், அங்கு சென்று கோபிநாத் உடலை கைப்பற்றி, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவனைமனையில் இருந்து, திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. கோபிதாத் உடலை பெற, அரசு மருத்துவமனைக்கு வந்த 200க்கும் மேற்பட்டவர்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News