தாராபுரத்தில் சைபர் கிரைம் புகார் அளிக்க விழிப்புணர்வு பிரசுரம் வெளியீடு
சைபர் கிரைம் புகார் அளிக்க விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.;
தாராபுரத்தில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை போலீஸார் விநியோகம் செய்தனர்.
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையிலும், மத்திய அரசு புதிய இணையதள cybercrime.gov.in என்ற முகவரியை பயன்பாட்டு கொண்டு வந்துள்ளனர். இந்த இணையதளம் மூலமாக நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக புகார் அளிக்கும் வகையில், இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களின் காவல்துறைகள் ஒரே குடையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக பயிற்சி முறையில் சோதிக்கப்பட்ட வந்த இந்த இணையதளம், தற்போது முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இணையதள முகவரியில் பாதிக்கப்பட்ட நபர், நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், பாதிக்கப்பட்ட நபர் உடனே இந்த இணையதளத்தில் புகார் அளித்தால், அவர் இருக்கும் இடத்தில் உள்ள காவல்துறைக்கு உடனடியாக இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தாராபுரம் போக்குவரத்து போலீஸார் சார்பில் தாராபுரத்தில் நடந்தது. இன்ஸ்பெக்டர் ஞானவேல் தலைமையில் நடந்த, இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள், வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.