தாராபுரம் அருகே 2000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
தூரம்பாடி செம்மொழி நகர் முதல் நைனாகவுண்டன்வலசு வரை 2000 பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.;
பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுகவினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தூரம்பாடியில் செம்மொழி நகர் முதல் நைனாகவுண்டன்வலசு வரை 2000 பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். இதில் ஊராட்சி முன்னாள் செயலாளர் மோகன்ராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம், வேலுசாமி உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.