மகாளய அமாவாசையான இன்று தாராபுரம் அமராவதி ஆற்றில் நீராடி ய மக்கள்

மகாளய அமாவாசையான இன்று அமராவதி ஆற்றுக்கு வந்த பக்தர்கள் ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

Update: 2021-10-06 08:29 GMT

தாராபுரம் அமராவதி ஆற்றில் நீராடிய மக்கள்.

தாராபுரம் மகாளய அமாவாசையான இன்று அமராவதி ஆற்றில் நீராடி தர்ப்பணம் கொடுத்தனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அமாவாசை மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மகாளய அமாவாசையான இன்று பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்யவும், புனித நீராடி தர்ப்பணம் செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதன் காரணமாக தாராபுரம் ஈஸ்வரன் கோவில் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் மகாளய அமாவாசையான இன்று அமராவதி ஆற்றுக்கு வந்த பக்தர்கள் ஈஸ்வரன் கோவில், பகுதிக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.           

Tags:    

Similar News