தாராபுரத்தில் அதிகபட்ச மழை: தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், அதிகபட்ச மழை பெய்த நிலையில், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.;
திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், நேற்று மாலை, 5 மணி துவங்கி, இரவு முழுக்க பலத்த மழை பெய்தது. தாராபுரத்தில், 132 மில்லி மீட்டர் மழை பதிவானது.
இதனால், நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட இடங்களில், சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதேபோன்று, பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதிப்பு விபரங்களை, வருவாய் துறையினர்,கள ஆய்வு மூலம் கண்டறிந்து, சேதத்தை அளவிட்டு வருகின்றனர். மருதூர் உப்பாறு அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர், பழைய பாலத்தில் பெருக்கெடுத்து ஓடியது.