தாராபுரத்தில் ஒண்டிவீரன் நினைவு நாள்; அமைச்சர் கயல்விழி அஞ்சலி
ஒண்டிவீரன் 250வது நினைவு நாளை முன்னிட்டு தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி மலர் தூவி மரியாதை செய்தார்.;
ஒண்டிவீரன் 250 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் விடுதலை போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரனின் 250 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
தமிழ்புலிகள் கட்சியின் மேற்கு மண்டலம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஒண்டிவீரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் துணை செயலாளர் ஒண்டிவீரன், திமுக., நகர செயலாளர் தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.