குண்டடம் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது

குண்டடம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

Update: 2021-07-10 14:09 GMT

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே  ஊதியூரில்,  ஒரு டாஸ்மாக்  கடை அருகே பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக குண்டடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், அந்த பெட்டிக்கடையை தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது, 96, மது பாட்டில்கள் இருந்தன. மது பாட்டில் வைத்து இருந்த, புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த ராஜசேகரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News