சின்னவெங்காயம் விதைத்தால் பெரியவெங்காயம் விளைச்சல்: விவசாயிகள் ஷாக்

தாராபுரத்தில், போலி வெங்காய விதை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-15 13:33 GMT

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் சுற்று வட்டார பகுதிகளான நவநாரி, பெல்லம்பட்டி, கள்ளிவலசு, மருதூர், பனமரத்துப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வெங்காய அறுவடை பணி நடக்கிறது.

சின்னவெங்காயம் பயிரிட்ட இடத்தில், தற்போது பெரிய வெங்காயம் விளைச்சலாகி இருப்பது கண்டு, விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெங்காயம் விதை வழங்கலில் மோசடி நடந்திருப்பதாக, அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், பீஜ்ஷீட்டல் டெய்லர் என்ற கம்பெனி பெயரில் ஒரு கிலோ விதை 16, ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி பயிரிட்டோம். ஏக்கருக்கு 5, டன் முதல் 11, டன்  வெங்காயம் கிடைக்கும். ஆனால், தற்போது  ஒரு டன் மட்டுமே வெங்காயம் விளைச்சலாகி உள்ளது.

இந்த வகை வெங்காயம் பெரிய வெங்காயமாக இல்லாமலும், சின்ன வெங்காயமாக இல்லாமலும், சிறிய சித்துவகை வெங்காயமாக விளைச்சலாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகார் அளிக்கவுள்ளோம். போலி விதை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News