1 ஆண்டுக்கு முன் நடந்த இரட்டை கொலை வழக்கு: உடல்கள் தாேண்டி எடுத்து விசாரணை

மூலனூரில் ஒரு ஆண்டுக்கு முன் நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக, புதைக்கப்பட்ட இடத்தில் சடலங்களை தோண்டி எடுத்து விசாரணை செய்தனர்.

Update: 2021-08-11 15:50 GMT

மூலனூர் அருகே உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் விசாரணை செய்த போலீசார்.

மூலனூர் அருகே கடந்த ஒரு ஆண்டுக்கு முன் நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூர் சுள்ளப்பொருக்கி பாளையத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் முத்துசாமி. இவரது தோட்டத்தில் இரண்டு உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக மூலனூர் போலீசாருக்கு புகார் சென்றது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன் வரப்பு சண்டை தொடர்பாக ஏற்பட தகராறில் இருவர் கொலை செய்து வயலில் புதைக்கப்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்த இரு  சடல்களை தோண்டி எடுத்தனர்.

ராணுவ வீரர் முத்துசாமி, இந்த இருவரையும் கொலை செய்தாரா அல்லது வேறு யாரேனும் இந்த கொலை செய்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் நடந்த கொலை சம்பவம் தற்போது மூலனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News