தாராபுரம் நகராட்சி எரிவாயு பழுது: செப் 30 ம் தேதி வரை தற்காலிக நிறுத்தம்
தாராபுரம் நகராட்சி எரிவாயு பழுது ஏற்பட்டு உள்ளதால், எரியூட்டும் பணி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.;
தாராபுரம் பகுதியில் இறப்பவர்களின் உடல்கள் நகராட்சி தகன மேடை மூலம் எரியூட்டப்படுகிறது. கொரோனா இறப்பு, சாதாரண இறப்பு எண்ணிக்கை காரணமாக சமீப காலமாக உடல்கள் எரியூட்டுவது அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் எரிவாயு தகனமேடை பழுது ஏற்பட்டதால், தற்போது பராமரிப்பு பணி நடக்கிறது. இதுகுறித்து தாராபுரம் நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ள அறிக்கையில், தாராபுரம் நகராட்சியில் செயல்பட்டு வரும் எரிவாயு தகனமேடை பழுது ஏற்பட்டு உள்ளதால், பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே எரியூட்டுதல் பணி செப்.,30 ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.