திருப்பூரில் ஆடி அமாவசையையொட்டி கோபுர தரிசனம் செய்த பக்தர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் கோயில் உள்ளே சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், கோபுர தரிசனம் செய்து வழிபட்டனர்.

Update: 2021-08-08 06:17 GMT

தாராபுரத்தில் உள்ள கோவிலில் நடை சாத்தப்பட்டு இருந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுப்பதால் ஆடி அமாவாசையான இன்று கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும் சில பக்தர்கள் வெளியில் நின்று கோபுர  தரிசனம் செய்து சென்றனர்.கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பக்தர்கள் கோபுர தரிசனம் செய்து சென்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் 46 இடங்களில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஆடி அமாவாசையான இன்று கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. சாமிகளுக்கு நடைபெறும் பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரையில், அய்யம் பாளையம் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் , சிவன்மலை சுப்பிர மணியசுவாமி கோவில், அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் , திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் தாரா புரம் அகஸ்தீஸ்வரர் கோவில் , சர்க்கார் பெரிய பாளையம் சுக்ரீஸ்வரர் கோவில்,

முத்தூர் செல்வகுமாரசுவாமி கோவில் , முத்தூர் அத்தனூரம்மன் மற்றும் குப்பயண்ணசுவாமி கோவில் , மூலனூர் வஞ்சியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் நாட்ராயசுவாமி கோவில் வெள்ள கோவில் வீரக்குமாரசுவாமி கோவில் , மணலூர் செல்லாண்டியம்மன் கோவில், வள்ளி யரச்சல் அழகு நாச்சியம்மன் கோவில் , கருவலூர் மாரியம்மன் கோவில் , வெள்ளியம்பதி பத்ரகாளியம்மன் கோவில்,

தாராபுரம் காடு அனுமந்தராயசுவாமி கோவில் பரஞ்சேர்வழி கரியகாளியம்மன் கோவில் , தம்மரெட்டிபாளையம் கொடுமணல் தங்கம்மன் கோவில் , ஊத்துக்குளி வெற்றி வேலாயுதசுவாமி கோவில் , திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி , வீரராகவப் பெருமாள் கோவில் , பாப்பினி பெரியநாயகியம்மன் கோவில் , முத்தணம் பாளையம் அங்காளம்மன் கோவில் ஆகிய 22 கோவில்களில்பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இன்று ஆடி அமாவாசை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சென்றனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் கோவில் முன்பு நின்று தரிசனம் செய்து விட்டு சென்றனர்.


Tags:    

Similar News