நெல் அறுவடைக்கு பின் பயறு வகை சாகுபடி: விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
தாராபுரத்தில், நெல் தரிசில் பயிறு வகை சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டாரம், பழையகோட்டை கிராமத்தில், நெல் தரிசில் பயறு வகை சாகுபடி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாட்ட தேசிய உணவு பாதுகாப்பு திட்ட, திட்ட ஆலோசகர் அரசப்பன், பங்கேற்று பேசினர்.
காங்கயம் வட்டாரத்தில், 750 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெல், அறுவடைக்கு தயாராக உள்ளது. நெல் அறுவடை முடிந்த பின், பூமி தரிசாக இருக்கும். அங்கு பயறு வகை பயிர்களை சாகுபடி செய்யலாம். இதன் மூலம் கூடுதல் மகசூல் பெற முடியும். நெல் தரிசு பூமியில், பயறு வகை பயிர்களை சாகுபடி செய்யும் போது, காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து, பூமியில் நிலைநிறுத்துவதன் மூலம், மண் வளம் மேம்படும் என்பன போன்ற கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. நிகழ்ச்சியில், வேளாண்மை உதவி இயக்குனர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.