திருப்பூர் மாவட்டத்துக்கு கோவிஷீல்டு 20500; கோவாக்சின் 2240 ஒதுக்கீடு

திருப்பூர் மாவட்டத்திற்கு, 20 ஆயிரத்து 500 கோவிஷீல்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; நாளை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Update: 2021-07-16 14:35 GMT

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வர துவங்கி உள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 8, லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

கடந்த 2, நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஊசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, தமிழகம் முழுவதும் 6, லட்சத்து 1630, கோவிஷீ்ல்டு தடுப்பூசியும், 91, ஆயிரத்து 580, கோவாக்சின் தடுப்பூசி வந்தது. இதில், திருப்பூர் மாவட்டத்திற்கு 20, ஆயிரத்து 500, கோவிஷீல்டு தடுப்பூசியும், 2240, கோவாக்சின் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சேலத்தில் இருந்து தடுப்பூசிகள் திருப்பூர்  கொண்டு வரப்பட்டு, பகுதிவாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் நாளை தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News