தாராபுரத்தில் அரசுப்பள்ளி ஆசிரியருக்கு கெரோனா
கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் விடுப்பு எடுத்து கொண்டு, பள்ளிக்கு வரவில்லை. ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பள்ளியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.