தாராபுரம்: கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த சகோதரர்களால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தங்களை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த சகோதரர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-08 14:41 GMT

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் அர்ஜூனன்42, இவரது சகோதாரர் கோபால்,40, இவரும் சரக்கு ஏற்றும் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
தாராபுரம் சந்தைப்பேட்டை பகுதியில் பழைய பொருட்களை லாரியில் ஏற்றும் பணியில் இருவரும் ஈடுபட்டு வந்தனர். அப்போது சாக்கு பையில் இருந்த 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு,  கோபாலின் கையில் கடித்தது. அப்போது, பாம்பை அடிக்க முயற்சித்த அர்ஜூனனையும் அது கடித்தது. இதனால், இருவரும் பரபரப்படைந்தனர். 

அதே நேரம், கடித்த பாம்பை லேசாக அடித்து, அதை உயிருடன் பிடித்துக்கொண்டு தாராபுரம்அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர். சிகிச்சைக்கு வந்த இருவரும் பாம்பு உயிருடன் கொண்டு வந்ததை அறிந்து, அரசு மருத்துவமனை பணியாளர்கள் அச்சத்தில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதனிடையே, பாம்பு கடிப்பட்ட இருவருக்கும் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு பாம்பை கொண்டு வந்து சிகிச்சைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News