தியாகி இம்மானுவேல் சேகரின் 64 வது நினைவு தினம்
தாராபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரின் 64 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 64 வது நினைவு நாளை முன்னிட்டு, தாராபுரத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு தேவேந்திரர் இளைஞர் பேரவை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு, மாநில செயலாளர் டாக்டர் கணபதி தலைமை வகித்தார்.
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர் தியாகி இமானுவேல் சேகரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவப்பட்டது.
நிகழ்ச்சியில் தாராபுரம் முன்னாள் எம்எல்ஏ காளிமுத்து, மாவட்ட அமைப்பாளர் கருப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.