அமராவதி ஆற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது

தாராபுரம், மூலனூர் அருகே அமராவதி ஆற்றில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-06-21 13:11 GMT

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் நஞ்சை தலையூர் நாகாத்தம்மன் கோவில் அருகே அமராவதி ஆறு கடந்து செல்கிறது. இப்பகுதி ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக மூலனூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில், போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையில் போலீசார் சென்று பார்த்தபோது, டாட்டா சுமோ  மற்றும் மினி டோர் வேனில் மணல் மூட்டைகளை கட்டி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு நின்றிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் இருவரும் மூலனூர் மல்லம்பாளையம் பெரியகாடு தோட்டம் பகுதியை சேர்ந்த தனபால், 50, கார்த்திகேயன், 30,என்பதும், இருவரும் மணல் கடத்தியதை ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News