திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்-ஆட்சியர் பவன்குமார் கொரொனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதே போல் வருவாய் துறை காவல்துறை, நகராட்சி பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தாராபுரம் சார்-ஆட்சியர் பவன் குமார் கொரொனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி தடுப்பூசியை தாராபுரம் அரசு மருத்துவமனையில் செலுத்தி கொண்டார். அவருடன் வருவாய் துறை அலுவலர்களும் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். அப்போது அவருடன் பொது சுகாதாரத் துறையினர் மருத்துவஅலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சார் ஆட்சியர், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். வழக்கமான ஊசி போடும் போது உள்ள வலி கூட இந்த தடுப்பூசியில் இல்லை. களப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள முன் களப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. தடுப்பூசி குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்தார்.