இஸ்ரேல் உடனே போரை நிறுத்தணும் :இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்..!
இஸ்ரேல் நடத்தும் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்க போரை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
திருப்பூர் குமரன் நினைவிடத்தின் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாலஸ்தீனத்தின் மீதான போரை தடுத்து நிறுத்த வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி தலைமை தாங்கினார். பாலஸ்தீனம், லெபனான் உள்ளிட்ட நாடுகளின் மீது இஸ்ரேல் தொடர்ந்து போர் புரிந்து வருகிறது.
ஐநா மற்றும் உலக நாடுகள் பலவும் போரை நிறுத்த வலியுறுத்தியும் இஸ்ரேல் அவைகளைக் ண்டுகொள்ளவிலை. இந்தப்போரினால் பல அப்பாவி மக்களும் கொல்லப்படுகின்றனர். போரை நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியும் சர்வதேச சட்டங்களை மதிக்காமல் இஸ்ரேல் உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போர்புரிந்து வருகிறது. இது கண்டனத்துக்குரியது.
போரினால் அப்பாவி மக்களை படுகொலை செய்யும் கொடிய நடவடிக்கையை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் காமராஜ், மாவட்டச் செயலாளர் முத்துக்கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்டச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், இசாக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.