திருப்பூர் பகுதியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

ஊத்துக்குளி, குன்னத்தூர், அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.;

Update: 2021-09-02 12:53 GMT

பைல் படம்.

திருப்பூர் மாநகரில் நேற்று ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று திருப்பூர் வடக்கு பகுதியில் 22 மில்லி மீட்டர், அவிநாசி 2.20 மி.மீ, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் பகுதி 8 மி.மீ., திருப்பூர் தெற்கு பகுதியில் 18 மி.மீ, மழை பெய்தது. இந்நிலையில் இன்று ஊத்துக்குளி, குன்னத்தூர், அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக பெய்தது. தற்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News