வஞ்சிப்பாளையம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'கல்வி 40' செயலி அறிமுகம்

திருப்பூர் மாவட்டம், வஞ்சிப்பாளையம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கல்வி 40 என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.;

Update: 2021-10-18 12:05 GMT

வஞ்சிபாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், கல்வி40- என்ற செயலியை அறிமுகம் செய்து, பயிற்சி அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில், அரசுப்பள்ளிகளில் முதல் முறையாக, அவினாசி தாலுகா, வஞ்சிபாளையத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு,  கல்வி 40 என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியை கொண்டு, குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது தொடர்பாக சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது பற்றி பயிற்சி தரப்பட்டது.

பயிற்சி நிகழ்வில் பங்கேற்ற, தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர், நண்பர்கள் குழு அறக்கட்டளை நிர்வாகிகள்.

பள்ளியில் நடைபெற்ற இந்த செயலி குறித்த பயிற்சியில், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்,  பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர், மற்றும் நண்பர்கள் குழு அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செயலியை, விரைவில் மாவட்டத்தில் உள்ள  பல பள்ளிகளிலும் செயல்படுத்த உள்ளதாக,  நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News