புதுப்பாளையம் ஊராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடக்குமிடங்கள்

புதுப்பாளையம் ஊராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடக்குமிடங்கள் விவரம் வருமாறு:;

Update: 2022-03-11 13:30 GMT

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சியில், நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதன்படி, புதுப்பாளையம் துணை சுகாதார நிலையத்திலும் முருகம்பாளையம் அங்கன்வாடி மையத்திலும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகிறது.

எனவே, இரண்டாம் தடுப்பூசி போட வேண்டியவர்கள் உள்ளிட்ட அனைவரும், ஆதார் அட்டையுடன் வந்து முகாமில் பங்கேற்று  பயன் பெற்றுக் கொள்ளுமாறு, புதுப்பாளையம் ஊராட்சித் தலைவர் கே.பி. கஸ்தூரி பிரியா கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News