மானிய விலையில் டூ வீலர் உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்

மானிய விலையில் டூ வீலர் பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2021-07-17 18:29 GMT

திருப்பூர் கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியை சிறப்பாக செயல்படுத்த புதிய வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியான நபருக்கு மொத்த விலையில் ரூ.25. ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50, சதவீதம் , இதில் எது குறைவோ அந்த தொகையை மானியமாக வழங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் குறைந்த பட்சம் 5, ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். 18, வயதுக்கு மேற்பட்டவர்கள், 8, ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். தகுதியான நபர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல  அலுவலகத்தில்  விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து  நேரில் அல்லது தபால் மூலம் ஆகஸ்டு 6, ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News