அவினாசி வட்டாரத்தில் வீடு வீடாக தடுப்பூசி : பணியாளர்களுக்கு பயிற்சி

அவினாசி வட்டாரத்தில், வீடு வீடாக தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு, பயிற்சி வழங்கப்பட்டது.;

Update: 2021-11-17 09:30 GMT

அவினாசியில், வீடு வீடாக கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி சுகாதாரப்பிரிவினர் சார்பில், 85 சதவீதம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அவிநாசி பி.டி.ஓ., அலுவலகத்தில், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் மத்தியில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதில், வீடு வீடாக தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், பரமன் உள்ளிட்டேர் பலர் பங்கேற்று, ஆலோசனை வழங்கினர்.

Tags:    

Similar News