கோரிக்கைகளை வலியுறுத்தி அவினாசியில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தொழிற்சங்கத்தினர் சார்பில், அவினாசி தபால் நிலையம் முன் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

Update: 2022-03-28 23:30 GMT

அவிநாசியில்,  தபால் நிலையம் முன் தொழிற்சங்கத்தினர் சார்பில், பெண்கள் உட்பட, 150க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில், இரண்டு நாள் ஸ்டிரைக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவ்வகையில் நேற்று, அவிநாசியில் தபால் நிலையம் முன் தொழிற்சங்கத்தினர் சார்பில், பெண்கள் உட்பட, 150க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து, கோஷம் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், அவிநாசி போலீசார் பேச்சு நடத்தி, மறியலை கைவிட செய்தனர். இதனால், அவிநாசி –- கோவை சாலையில், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதில், சி.ஐ.டி.யு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் முத்துசாமி, சி.ஐ.டி.யு. பனியன் சங்க மாவட்ட பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, சி.ஐ.டி.யு மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி, ராஜன், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் தனலட்சுமி, வட்டார செயலாளர் இந்திராணி, வட்டார பொருளாளர் மல்லிகா, ஏ.ஐ.டி.யூ.சி ஒன்றிய செயலாளர் இசாக், காங்கிரஸ் நகர தலைவர் கோபாலகிருஷ்ணன், கண்ணன், எம்.எல்.எப்  சார்பில் பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News