திருமுருகன்பூண்டி தி.மு.க. வசம்; தனிப்பெருங்கட்சியானது அதிமுக!
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியை, தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் உள்ள, 27 வார்டுகளுக்கான தேர்தல் நடந்தது. பூண்டி, பேரூராட்சியாக இருந்தவரை அ.தி.மு.க., மற்றும் கம்யூ., கட்சிகளின் செல்வாக்கு மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. இதுவரை நடந்த பேரூராட்சி தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் கம்யூ., கட்சிகளை சேர்ந்தவர்கள் தான் தலைவர், துணைத் தலைவர் பதவியை வகித்துள்ளனர்.
இம்முறை தேர்தலில், தி.மு.க., 9 வார்டுகளிலும், இ.கம்யூ., 5 வார்டுகளிலும், மா.கம்யூ., 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. தி.மு.க., கூட்டணி, 17 வார்டுகளில் வெற்றி பெற்று, நகராட்சியை கைப்பற்றியது. எனினும் தனிப்பெருங்கட்சியாக, அதிமுக பத்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.