அவிநாசி அருகே கருவலூர் கடையில் திருட்டு
அவிநாசி அருகே கருவலூர் மெயின் ரோட்டில் உள்ள கடையில் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.;
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து கருவலூர் மெயின்ரோட்டில் கடை நடத்தி வருபவர் தங்கவேல். சம்பவத்தன்று இரவு, இவர் தனது கடையை வழக்கம் போல் பூட்டிவிட்டு சென்றார். பின்னர் காலையில் கடைக்கு வந்து பார்த்த போது, அதன் பலகை கதவு , பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியுற்றார்.
கடைக்குள் சென்று பார்த்தபோது, கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள், பீடி பண்டல்கள் மற்றும் ரூ.1000 ரொக்கம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.