அவிநாசி அருகே இரைத்தேடி வந்த மான்; நாய்கள் கடித்து குதறியதால் உயிரிழப்பு

அவிநாசி அருகே உணவு தேடி வந்த மானை நாய்கள் கடித்ததில் மான் பரிதாபமாக உயிரிழந்தது.;

Update: 2021-08-04 14:36 GMT

 நாய்கள் கடித்ததில் இறந்த மானின் உடல்.

அவிநாசி அருகே தங்கமாகுளம், தாமரைக்குளம், வேலாயுதம்பாளையம், ஆட்டையாம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான மான்கள் உள்ளன. வறட்சி நேரத்தில்  உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி காடுகளை விட்டு வெளியில் வருகிறது.

இந்நிலையில் இரண்டு வயது பெண் மான் ஒன்று, தாமரைக்குளம் பகுதியில் வந்தைக் கண்ட நாய்கள் துரத்திச் சென்று கடித்தது. இதில் மான் பரிதாபமாக உயிரிழந்தது.

தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மானின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News