அவினாசியில் துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்கல்

அவினாசியில், துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Update: 2022-03-28 16:45 GMT

சேவூர் மற்றும் தண்டுக்காரன்பாளையம் ஊராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் விழுதுகள் என்ற அமைப்பு செயல்படுகிறது. 'விழுதுகள்' அமைப்பின் சார்பில், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சேவூர் மற்றும் தண்டுக்காரன்பாளையம் ஊராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், 'விழுதுகள்' அமைப்பின் திட்ட மேலாளர் சந்திரா, ஒருங்கிணைப்பாளர் சுதா, உள்ளிட்டோர் கலந்து கொண்டு தூய்மைப்பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினர்.

Tags:    

Similar News