ரேஷன் கார்டு, ஆதார் கார்டு திருத்தம்: புதுப்பாளையத்தில் சிறப்பு முகாம்

அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு திருத்தம் செய்வதர்கான சிறப்பு முகாம், நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.;

Update: 2021-09-16 03:03 GMT

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா புதுப்பாளையம் ஊராட்சியில் நாளை (செப்., 17 தேதி) மற்றும் 18 ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில், ஊராட்சி அலுவலகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் ஆதார் கார்டு புதுப்பித்தல் மற்றும் புதிதாக வாங்குதல்,  ரேஷன் கார்டு புதுப்பித்தல் மற்றும் புதிதாக வாங்குதல் மற்றும் ஜாதிச்சான்றிதழ் போன்ற விண்ணப்பம் கொடுத்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டை பெறுவதற்கு, ஆதார கார்டு, வீட்டு வரி ரசீது,கேஸ்புக்,பான் கார்டு,பேங்க் பாஸ்புக், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள், ஆதார் அட்டை பெறுவதற்கு மற்றும் திருத்தம் செய்வதற்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம் ,தபால் நிலைய சேமிப்பு கணக்கு புத்தகம், மின்வாரிய பில் மூன்று மாதத்திற்கு உரியது, தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு அட்டை, போட்டோ, ஊராட்சி மன்ற தலைவர் கவரிங் லெட்டர் அல்லது டாக்டர் சர்டிபிகேட் போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும்.

ஜாதிச்சான்று பெறுவதற்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ,போட்டோ, பெற்றோர் ஜாதிச்சான்று அல்லது பள்ளி மாற்றுச்சான்று போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும் என ஊராட்சித் தலைவர் கஸ்தூரி பிரியா தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News