முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் மரக்கன்று நடவு
கோபியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் மரக்கன்று நடப்பட்டது.;
திருப்பூர் மாட்டம் அவிநாசியை மையமாக கொண்டு, களஞ்சியம் விவசாயிகள் சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கம் சார்பில் வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி, புலவர் கருக்கம்பாளையம் குளத்தில், மரக்கன்று நடும் விழா மற்றும் பனை விதை நடவு நிகழ்ச்சி நடக்கிறது.
இந்தநிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது, செங்கோட்டையன் வீட்டில் ஒரு மரக்கன்று நடப்பட்டது. இந்த மரக்கன்றை, எம்.எல்.ஏ. செங்கோட்டையன் மற்றும் களஞ்சியம் விவசாயிகள் சங்கத்தினர் நடவு செய்தனர்.