அவினாசி காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

அவினாசி அருகே நடந்த கொலை சம்பவத்தில், குற்றவாளிகளை, சாதுயர்மாக பிடித்த அவினாசி காவல்துறை உதவி ஆய்வாளருக்கு, பாராட்டு சான்று வழங்கினார்.

Update: 2021-12-14 07:00 GMT

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாராட்டு சான்று பெறும் அவிநாசி உதவி ஆய்வாளர் அமல் ஆரோக்கியதாஸ்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே, தெக்கலுாரில் உள்ள ஒரு பாலத்துக்கு அடியில், கடந்த மாதம் 21ம் தேதி, மாலை 3:00 மணிக்கு, பீகார் மாநிலத்தை சேர்ந்த அனில்குமார் யாதவர், 22 என்ற இளைஞர், மர்ம நபர்களால் பலமாக தாக்கப்பட்ட நிலையில், உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அருகே இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இது தொடர்பாக, அவினாசி காவல்துறை உதவி ஆய்வாளர் அமல் ஆரோக்கியதாஸ், வழக்குப்பபதிவு செய்து விசாரித்தார். இறந்த அனில் குமாரின் நண்பர்களை துருவி, துருவி விசாரித்ததில், அனில் குமார் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிய வந்தது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், இந்த காதல் விவகாரம் பிடிக்காத, அந்த பெண்ணின் தந்தை ரவிச்சந்திரன், அவருடம் வேலை செய்யும் பாபு, மணிகண்டன், ரஞ்சித்குமார் ஆகியோர் தான் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர் என்ற விவரம் தெரிய வர, அவர்களை கைது செய்தார்.

வெறும், 24 மணி நேரத்தில், குற்றவாளிகளை பிடித்த உதவி ஆய்வாளரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷெசாங் சாய் பாராட்டி, ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Tags:    

Similar News