கிசான் கிரெடிட் கார்டு: புதுப்பாளையம் பகுதி விவசாயிகள் கவனத்திற்கு
அவினாசி தாலுகா, புதுப்பாளையம் பகுதி விவசாயிகள், உரிய ஆவணங்களை கொண்டு வந்து, கிசான் கிரெடிட் கார்டு பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.;
அதன்படி, கிசான் கிரெடிட் கார்ட் பெற தேவையான ஆவணங்கள்: 1.சிட்டா, 2. ஆதார் அட்டை, 3. வங்கி பாஸ் புத்தகம் முன்பக்க நகல், 4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2 எண்ணிக்கை, 5. கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட அடங்கல் ஆவணங்களுடன், கிசான் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, வஞ்சிபாளையம் கூட்டுறவு சொசைட்டி அல்லது பயனாளியின் சேமிப்பு கணக்கு எண் உள்ள வங்கியில் கொடுத்து கிசான் அட்டை பெற்றுக்கொள்ளலாம்.
ஏற்கனவே வஞ்சிபாளையம் சொசைட்டியிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பயிர்க் கடன் பெற்று இருக்கும் விவசாயிகளை தவிர்த்து, பிற விவசாயிகள், கிசான் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும், புதுப்பாளையம் கிராமத்தில் வரும் மே 1ம் தேதி இது தொடர்பான முகாம் நடைபெறும் என்று, ஊராட்சி தலைவர் கஸ்தூரி பிரியா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு, தொடர்பு அலுவலர்கள் பிரகாஷ் - 9524829514, அருள் வடிவு - 9843774567 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.