அவினாசியில் வீடு தேடி தடுப்பூசி முகாம்
அவினாசி சுற்று வட்டார கிராமங்களில் வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடந்தது.;
திருப்பூர் மாவட்டம், அவினாசி பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட அவிநாசிலிங்கம்பாளையம், ஈவேரா நகர் உள்ளிட்ட இடங்களில், சுகாதார செவிலியர்கள் மூலம் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தினர். அதே போன்று, நடுவச்சேரி ஊராட்சிப் பகுதிகளிலும், வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன்மூலம், மக்கள் அலைகழிப்பின்றி, வீடுகளிலேயே தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வாய்ப்பை பெற்றனர்.