அவிநாசி: பார்வையற்ற மயிலுக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினர்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, பார்வையற்று தடுமாறிக் கொண்டிருந்த மயிலுக்கு, வனத்துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.;

Update: 2021-06-15 15:06 GMT

பார்வை பாதிப்பால் அவதியுற்று வந்த மயில். 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சுற்று வட்டாரத்தில், அடர்ந்த பசுமப்பரப்புகள் அதிகளவில் உள்ளதால், ஏராளமான மயில்கள் வலம் வருகின்றன. உணவுக்காக, ஆங்காங்கே மயில்கள் திரிந்து கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் தாழ்வாக பறந்து மின் கம்பத்தில் மோதுவது உள்ளிட்டவற்றால், அவை விபத்தில் சிக்குவதுண்டு.

இந்நிலையில், வளையபாளையம்  வீரமடை தோட்டத்தில் 2, வயது பெண் மயில் ஒன்று பார்வை தெரியாமல் பறக்க முடியாமல் இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி, அக்கம் பக்கத்தினர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த மயிலை மீட்டனர். 

அந்த மயில்லுக்கு, துலுக்கமுத்தூர் கால்நடை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மயிலின் கண்களில் பூளைகட்டியதால் பார்வை பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதனை  டாக்டர்கள் அகற்றிய பிறகு, மயிலுக்கு பார்வை இயல்பானது. இதையடுத்து, மயிலை அருகே உள்ள காட்டுப்பகுதியில் வனத்துறையினர் விட்டுச் சென்றனர்.

Tags:    

Similar News