அவிநாசியில் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம்

கொரோனா பரவலை கட்டுப்படும் வகையில், உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;

Update: 2021-08-09 11:59 GMT

அவிநாசியில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருந்த நிலையில், சில நாட்களாக ஆங்காங்கே தொற்றுப்பரவல் மீண்டும் பரவ துவங்கி உள்ளது. கொரோனா பரவல் குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் வகையில், உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் ஊர்வலம் நடந்தது.

அவிநாசி பேரூராட்சி நிர்வாகம், சுகாதார துறை சார்பில் நடந்த இந்த ஊர்வலம், அவிநாசி ரதி வீதி வழியாக சென்றது. கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியில் வர கூடாது என கோஷமிட்டவாறு சென்றனர்.

Tags:    

Similar News