ஊத்துக்குளியில் ஓய்வூதியர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
ஊத்துக்குளியில் ஓய்வூதியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.;
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் குன்னத்தூரில் நடந்தது.
கூட்டத்துக்கு தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆண்டமுத்து வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடந்த ஜூலை 1 ம் தேதி முதல் அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பாகுபாடின்றி போனசாக ரூ.1000 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் சண்முகம், சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.