குன்னத்தூர் : பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து காங்., 'அல்வா' ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து காங்., அல்வா கொடுத்து ஆர்ப்பாட்டம்;
காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து குன்னத்தூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் சர்வேஸ்வரன் தலைமை வகி்த்தார். மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் கலந்துகொண்டு அங்கு பெட்ரோல் அடிக்க வந்தவர்களிடம் மத்திய அரசு, மக்கள் மீது சுமத்தி இருக்கும் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசு மக்களுக்கு அல்வா கொடுத்துவிட்டது என்று சொல்லி அங்கு வந்த பொது மக்களுக்கு அல்வா கொடுத்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் முருகசாமி, காளிதாஸ், குப்புராஜ், சக்திவேல், ஈரோடு மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஊத்துக்குளியில் வட்டாரத் தலைவர் எம்.சி.பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.