அவினாசி கல்லுாரியில் தாய்மொழி தினம்

அவினாசி அரசு கலை அறிவியல் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.;

Update: 2022-02-21 16:30 GMT

அவிநாசி கலை  கல்லூரியில் நடைபெற்ற தாய்மொழி விழா.

அவினாசி அரசு கலை அறிவியல் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் நளதம், தலைமை வகித்து, துவக்கி வைத்தார். கம்ப்யூட்டர் துறை தலைவர் ஹேமமலதா, முன்னிலை வகித்தார். கல்லுாரி முகப்பில், 'தமிழ்' என்ற எழுத்து வடிவில் மாணவர்கள் அமர்ந்து, தங்களின் மொழிப்பற்றை வெளிப்படுத்தினர். பிறகு நடந்த கலை இலக்கிய போட்டிகளில் 100 மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மொழித்துறை பேராசிரியர்கள் சூரிய பிரபா, புனிதா, நந்தினி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தமிழ்த்துறை தலைவர் மணிவண்ணன், ஆங்கிலத்துறை தலைவர் தாரணி ஆகியோர் ஒருஙகிணைத்தனர்.

Tags:    

Similar News