உடன்பாட்டை ஏற்க மறுப்பு: அவினாசியில் தொடரும் விசைத்தறி ஸ்டிரைக்

அவிநாசி சுற்றுவட்டார விசைத்தறியாளர்கள், ஸ்டிரைக்கை தொடர்வது என, முடிவெடுத்து உள்ளனர்.

Update: 2022-02-16 13:15 GMT

விசைத்தறி உரிமையாளர்கள். 

கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தி, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள், கடந்த மாதம், 9ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற பேச்சில், பல்லடம் ரகத்துக்கு, 15 சதவீதம், சோமனூர் ரகத்துக்கு, 19 சதவீதம் என கூலி உயர்வு தருவதாக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

'நான்கு மாதம் கழித்து மீண்டும் கூலி உயர்வு வழங்கப்படும்' என இரு தரப்பிலும் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட, ஜவுளி உற்பத்தியாளர்கள் மறுத்ததால், பேச்சு, தோல்வியடைந்தது. விசைத்தறியாளர்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் நேற்று, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் நடந்த பேச்சில் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி உரிமையாளர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில், தெக்கலுார், பெருமாநல்லுார், அவிநாசி, புதுப்பாளையம் பகுதிகளில் இயங்கும் விசைத்தறி உரிமையாளர்கள் அவசர கூட்டம் கூட்டினர். கூலி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை, ஸ்டிரைக்கை தொடர்வோம், என்றனர்.

Tags:    

Similar News