அவிநாசி அருகே நடுவச்சேரியில் கல்வெட்டு கல்செக்கு கண்டெடுப்பு

அவிநாசி அருகே நடுவச்சேரியில் கல்வெட்டு கல்செக்கு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-08-06 15:03 GMT

அவிநாசி அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு.

அவிநாசி அருகே நடுவச்சேரியில் அங்காளம்மன் கோவில் எதிரில் சாலையோரமாக எழுத்துடன் கூடிய கல்செக்கு ஒன்று இருப்பதாக கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் கல்வெட்டு ஆய்வாளர்கள் முடியரசு, சிவக்குமார் ஆகியோர் கல்வெட்டை எடுத்து ஆய்வு செய்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், பொடுவித்த செக்குப்பம் மாக்கு கணக்கு கந்தசுவாமி எழுத்து உள்ளது. இதில் கல்வேலை செய்தவர் நாகப்பன் என்றும், பொறிப்பு என்பது பொடுவித்த என்பதையும், பொடுவித்த செக்கு அல்லது பொடிப்பதற்கான செக்கு எனலாம்.

ஏற்கெனவே இப்பகுதியில் மற்றொரு கல்வெட்டு 20 ஆண்டுகளுக்கு முன் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கணேசனால் கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டு மாவட்ட தொல்லியல் கையேட்டில் இடம்பெற்றுள்ளது.

தற்போது கண்டறியப்பட்ட கல்வெட்டு 2 ம் பாகமாகும். அவிநாசி, நடுவச்சேரி, சேவூர் போன்ற இடங்களில் செக்குகள் இருந்து உள்ளன. எண்ணெய் வணிகம் அந்த காலத்தில் நடைபெற்றுள்ளது என்றனர்.

Tags:    

Similar News