குன்னத்தூரில் 40 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில், 40 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2021-07-07 15:38 GMT

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, குன்னத்தூர் ரோட்டில் வந்த காரை நிறுத்தி, காரை சோதனை செய்தனர். பரிசோதனையில்,  காரில் 40 கிலோ அளவிலான போதைப்பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார், அவற்றை பறிமுதல் செய்து, போதைப்பொருள் கடத்தி வந்தவரை பிடித்து விசாரித்தனர். இதில், போதைப்பொருள் கடத்தி வந்தவர், திருப்பூர் நெரிபெரிச்சல் பகுதியை சேர்ந்த வேல்முருகன்,35, என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.

Tags:    

Similar News