திருப்பூர்: அவிநாசியில் போலீசை தாக்கிய 4 பேர் கைது
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், ரோந்து பணியின் போது போலீசை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் சர்வேஸ்வரன், போலீஸ் திருவேங்கடம் ஆகியோர், தெக்கலூர் பகுதியில், வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, செங்காலிபாளையம் மூலக்காட்டு தோட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக, அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், அப்பகுதிக்கு சென்ற போலீசார், இது தொடர்பாக நடராஜ், சுதன், சட்டாம்பிள்ளை, லோகேஸ்வரன், முத்துசாமி ஆகியோரிடம் விசாரனை நடத்தினர். அப்போது திடீரென அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து போலீஸ் திருவேங்கடத்தை, அவர்கள் அடித்தனர்.
இதில், திருவேங்கடத்திற்கு காயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜ், சுதன், சட்டாம்பிள்ளை, முத்துசாமி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 66, மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவானவரை, போலீசார் தேடி வருகின்றனர்.