திருப்பூர் மாவட்டத்திற்கு 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு

திருப்பூர் மாவட்டத்திற்கு, 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்ததனர்.

Update: 2021-07-28 14:17 GMT

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து கொண்டு செல்கிறது. அதே  நேரத்தில், பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமாக வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர் அடிப்படையில் டோக்கன் விநியோகம் செய்து, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சியில் 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 34 இடங்களிலும், அவிநாசி, வெள்ளக்கோவில், தாராபுரம், பொங்கலூர், மூலனூர், காங்கேயம் உள்ளிட்ட தாலுகா பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திற்கு 16 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசியும், 4 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சேலம் ஆர்விஎஸ்., டெலிவரி பாயின்ட்டில் இருந்து திருப்பூருக்கு தடுப்பூசி கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News