நாடாளுமன்றத் தேர்தல் 2024: திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் முன்னிலை

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் எந்த வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார் என்ற தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது Native News தமிழ்.

Update: 2024-06-04 04:33 GMT

நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் எந்த வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார் என்ற தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது Native News தமிழ்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொகுதிக்கு உட்பட்ட பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், திருப்பூர் வடக்கு. திருப்பூர் தெற்கு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று (ஜூன்.4) செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 9,201 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் அருணாசலம் 7,691 வாக்குகளும், பாஜக வேட்பாளர் முருகானந்தம் 2,658 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 1,255 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதன்மூலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 1,510 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முடியும் வரை முன்னணி நிலவரங்கள் மற்றும் முடிவுகளை தெரிந்து கொள்ள Native News தமிழ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்

Tags:    

Similar News